நான்கு பாதாள குழு உறுப்பினர்கள் கைக்குண்டுகளுடன் கைது
டுபாயைத் தளமாகக் கொண்ட பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவரின் தகவலின் பேரில், தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவ வெளியேறும் பகுதிக்கு அருகில் வைத்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு கைக்குண்டுகள் மற்றும் கிட்டத்தட்ட ஐம்பது கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உறவினரைக் கொலை செய்யும் நோக்குடன் மீகொட பிரதேசத்துக்குச் சென்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டுபாயில் உள்ள பாதாள உலக தலைவர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு ஒருவரையொருவர் அறிமுகம் இல்லை எனவும், டுபாயில் உள்ள பாதாள உலகத் தலைவரின் தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் வந்த வானின் சாரதி ஒவ்வொரு இடத்திலிருந்தும் உரிய நபர்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கொலையை நடத்திய பின்னர் சந்தேகநபர்கள் பிரதேசத்தில் உள்ள நிதி நிறுவனமொன்றில் கொள்ளையிடவும் திட்டம் தீட்டியிருந்தமை தெரியவந்துள்ளது எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





1000 கிமீ தூரத்தை அடையும் சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு எச்சரிக்கை News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
