நான்கு பொலிஸார் பணி இடைநிறுத்தம்
சட்டபூர்வ ஆவணங்களின் அடிப்படையில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியொன்றில் கப்பம் பெற்ற நான்கு பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை (Hambantota) அருகே வீரவில பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இரண்டு பொலிஸ் சார்ஜண்ட், இரண்டு கான்ஸ்டபிள்கள் ஆகியோரே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாடுகளை ஏற்றிச் செல்வதற்கான சட்டபூர்வ ஆவணங்கள் இருந்த நிலையில், மிருக வதைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவதாக அச்சுறுத்தி லொறி சாரதியிடம் இருந்து குறித்த நால்வரும் 11000 ரூபாவை கப்பமாகப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
பணி இடைநீக்கம்
இதனையடுத்து லொறி சாரதி மேற்கொண்ட முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த நான்கு பொலிஸாரும் கப்பம் பெற்றுள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஹம்பாந்தோட்டை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்பின்பேரில் குறித்த நான்கு பொலிஸாரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |