மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் நால்வர் காயம்
வவுனியா - கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் மரமொன்று முறிந்து வீட்டின் மீது வீழ்ந்ததில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (21) மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பெரியகுளம் பகுதியில் மாலை இலேசான மழை பொழிந்த நிலையில் வீட்டின் அருகில் நின்றிருந்த பாலை மரமொன்று முறிந்து வீட்டின் மீது விழுந்துள்ளது.
இதன்போது வீட்டில் இருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சிறுவர்களின் தாயார் சிறுகாயங்களிற்குள்ளாகியுள்ளார்.
வவுனியா கனகராயன்குளம் உட்பட அதனை அண்டிய பகுதிகளில் இன்று மாலை காற்றுடன் கூடிய கனமழை பெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
