பௌத்த துறவியை கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது
அவிசாவளை ஹன்வெல்லவின் தும்மோதர என்ற இடத்தில் 65 அகவையைக்கொண்ட பௌத்த துறவி ஒருவரை கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் சந்தேககத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2021 ஜனவரி 3 ஆம் திகதி ஒரு ஹன்வெல காவல்துறைக்கு கிடைத்த முறைப்பாட்டின்படி ஜனவரி 2ஆம் திகதியன்று உடுவில தர்மசிறி தேரர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் குறித்த பௌத்த துறவியின் எரிந்த உடல் கொடதெனியாவில் உள்ள இடம் ஒன்றில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது சந்தேககத்தின்பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் இந்தக் குற்றத்துக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு வாகனம் காவல்துறையினரால் மீட்கப்பட்டது.
விசாரணையின்போது கொல்லப்பட்ட துறவிக்கும் கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கும் இடையே சண்டை நிகழ்ந்தமை தெரியவந்துள்ளது.
அத்துடன் அவர்கள் குறித்த பௌத்த துறவியுடன் தங்கியிருந்த இளம் துறவி ஒருவரின் பெற்றோர் என்பது தெரியவந்துள்ளது.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam