மர்மமான நிலையில் உயிரிழந்த நான்கு பேர் - விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
தம்புள்ளை பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தி நான்கு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் 2 நாட்களுக்கு முன்னர் தம்புள்ளை விகாரை சந்தி பகுதியில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இன்றும் அதே மதுபானத்தை அருந்தி இருவர் உயிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மதுபான விற்பனை
இந்த சட்டவிரோத மதுபான வியாபாரத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பல தடவைகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தண்டனை பெற்றுள்ளனர்.
மேலும் சில காலமாக நடைபெற்று வரும் இந்த சட்டவிரோத மதுபான விற்பனை மோசடியால் பிரதேசவாசிகள் தற்போது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனைக்கு மேலதிகமாக, பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்று மரணத்திற்கான காரணங்களைக் கண்டறிய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.