சரணாலயத்தில் வேட்டைக்கு சென்ற நால்வர் கைது(Photos)
தப்போவ சரணாலயத்தில் வேட்டைக்கு சென்ற நால்வர் வனவிலங்கு உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நால்வர் கைது
தப்போவ சரணாலயத்தின் கம்பிரிகஸ்வெவ பகுதியில் வேட்டைக்குச் சென்ற நால்வர் வில்பத்து விலங்கு அலுவலகத்திற்கு உரித்தான நீலபெம்ம வனவிலங்கு உத்தியோகத்தர்களினால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 3 ரவைகள், கத்திகள், மின்விளக்குகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக வனவிலங்கு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் வேட்டையாடிய மான் இறைச்சி மற்றும் எறும்புண்ண இறைச்சிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சரீர பிணை
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் பகல புலியாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர்களென வனவிலங்குகள் உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் புத்தளம் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது ஒவ்வொருவொருக்கும் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணைப்படி நால்வருக்கும்
நான்கு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam