கல்லாறு பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் சோதனை
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகள்
இதன்போது அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் கல்லாறு பகுதியில் இருந்து மணல் ஏற்றி பயணித்த இரு டிப்பர் வாகனங்கள் சிக்கியுள்ளன.
அதே பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், கல்லாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கசிப்பு உற்பத்தி
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 25 லீட்டர் கசிப்பும் மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த விடயம் தொடர்பாக கைதான சந்தேகநபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், தடயப்பொருட்களை எதிர்வரும் 15.10.2025ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 10 மணி நேரம் முன்
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
விசா நிராகரிப்பால் உயிரைவிட்ட இந்திய மருத்துவர்! சிதைந்த அமெரிக்க கனவு..சிக்கிய கடிதம் News Lankasri