லஞ்சம் பெற்ற 4 மதுவரி அதிகாரிகளுக்கு 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை
லஞ்சம் பெற்றுக் கொண்ட மதுவரித் திணைக்களத்தின் நான்கு அதிகாரிகளுக்கு 28 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் 10 உடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 5 இலட்சம் ரூபாய் லஞ்சமாகக் கோரப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
நீதிமன்றின் உத்தரவு
அதில் 4 இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட நான்கு மதுவரி அதிகாரிகளுக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் 28 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாலினால் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, குற்றவாளிகளான நான்கு மதுவரி அதிகாரிகளுக்கும் 17 இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri