நுவரெலியாவில் பிரபல நான்கு மோசடி வியாபாரிகள்:துமிந்த நாகமுவவின் இரகசிய தகவல்
நுவரெலியாவில் பிரபல நான்கு வியாபாரிகள் தொடர்பில் அரசுக்கு தகவல் வழங்குவதாக மக்கள் போராட்ட கூட்டணியின் தலைவர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.
மக்கள் போராட்டக் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நுவரெலியாவில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய போதே இதனை தெரிவித்தார்.
அந்த நான்கு வியாபாரிகளின் பெயர்களை வெளியிட்ட அவர், அரசாங்கம் அவர்களுக்கு எதிராக சட்டத்தை வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு வியாபாரிகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நான்கு வியாபாரிகள் யார். இஷார நாணயக்கார, தம்மிக்க பெரேரா, சேன யக்தெனிய, ஹாரி ஜெயவர்தன இவர்கள் பெரும் தூள் மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொறுவருக்கும் 3 நிறுவனங்களுக்கு மேல் தூள் தொழிற்சாலைகள் இருக்கின்றன.

நாங்கள் மேலே குறிப்பிட்டது தேயிலை தூள் மோசடிகளில் ஈடுபடும் நான் வியாபாரிகளாவர். இந்த தேயிலை தூள் மோசடியில் ஈடுபடும் இவர்கள் பொருந்தொட்ட தொழிலாளர்களை சுரண்டி வாழ்வது சொற்களில் அடக்கிவிட முடியாதது.
பிரச்சினை
ஒரு 100 கிராம் தோயிலை தூள் பைக்கற்றின் விலை 300 ரூபா.இதில் 27 ரூபாவே தொழிலாளர்கள் சம்பளத்திற்கு செல்கிறது.மிகுதி 273 ரூபா நிறுவனத்திற்கும் இந்த பெக்கெட் பொதி செய்தல் மற்றும் சந்தைக்கு கொண்டு செல்வதற்காக.பத்தில் ஒரு பங்கே தொழிலாளர்களுக்கு செல்கிறது.

அதனால் எமது நாட்டுக்கு மக்களுக்கு நான் கேட்பது. தேநீர் என்று நீங்கள் அருந்துவது உதிரமா. அவ்வளவுக்கு இந்த பிரச்சினை கடுமையானதாகும் என்றார்.