வெள்ளைப்பூண்டு விவகாரம்! - மேலும் நால்வர் அதிரடியாக கைது
வெள்ளைப்பூண்டு ஊழல்' தொடர்பாக சதோசாவைச் சேர்ந்த மேலும் நான்கு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர்கள் நாளை (12) வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுத்தப்பட உள்ளனர்.
கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி லங்கா சதோசாவுக்கு சொந்தமான 54,000 கிலோகிராம் வெள்ளைப்பூண்டை எடுத்துச் சென்ற இரண்டு கொள்கலன்கள் கெரவலப்பிட்டியில் வைத்து கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பில் இரண்டு நாட்களுக்குப் பிறகு சதோசாவின் துணை பொது முகாமையாளர் கைது செய்யப்பட்டார்.
அத்துடன் சம்பவம் தொடர்பாக லங்கா சதோசாவின் நான்கு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அக்டோபர் 06 அன்று, குற்றப் புலனாய்வுத் துறை வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பாக மற்றொரு சந்தேக நபரை பம்பலப்பிட்டியில் வைத்து கைது செய்தது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
