மட்டக்களப்பு மாநகரசபையில் மேலும் நான்கு பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி
மட்டக்களப்பு மாநகரசபையில் மேலும் நான்கு பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொதுச்சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாநகரசபையின் கணக்காளருக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மாநகரசபை ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் 93 பேருக்கு நேற்று பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதனடிப்படையில் மேலும் நான்கு உத்தியோகத்தர்கள் கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளைப் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மாநகரசபையில் கோவிட்-19 தொற்றாளர் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து மாநகரசபையில் முன்னெடுக்கப்பட்டு வந்த மக்கள் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது வரையில் கோவிட்-19 தொற்றாளர்களுடன் நேரடி தொடர்புகளைப்பேணிய 30க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam