யாழில் பிறந்து நான்கு மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை உயிரிழப்பு!
யாழில் பிறந்து நான்கு மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று(26) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடுவில் கிழக்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சஜித்தீபன் கிஷாரா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைக்கு கடந்த 24ஆம் திகதி நான்கு மாதங்களில் ஏற்றப்படும் தடுப்பூசி ஏற்றப்பட்டது.
ஊசி ஏற்றப்பட்ட பின்னர் குழந்தையின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் குழந்தையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அரைமணிநேரத்தில் குழந்தை உயிரிழந்துள்ளது.
உடற்கூற்று மாதிரிகள்
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.
மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Ethirneechal: எங்க காதல சேர்த்து வை.. வெறிக் கொண்டு சீறிய சக்தி- திருமணத்தில் புது திருப்பம் Manithan

பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
