கனடாவில் நிரந்தர குடியுரிமை! - வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
அடுத்த ஆண்டு தங்கள் நாட்டில் மேலும் பலருக்கு "நிரந்தர குடியுரிமை" வழங்கப்படும் என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, 2021 ஆம் ஆண்டில், 401,000 வெளிநாட்டினர் நாட்டில் "நிரந்தர குடியுரிமை" பெற்றுக்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் இன்னும் தற்காலிக அடிப்படையில் நாட்டில் வசித்து வருவதாக குடிவரவு அமைச்சர் சீன் பிரேசர் தெரிவித்தார்.
கனடா தற்போது தனது மக்கள் தொகையை அதிகரிக்கவும், அதன் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் திறமையான பணியாளர்களை நியமித்து வருகிறது.
கனடா நாட்டில் வயது முதிர்ந்த மக்கள்தொகை அதிகரித்து வருவதால் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ள நாடு என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படுவது ஒரு நூற்றாண்டில் இதுவே முதல்முறை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோவிட் தொற்றுநோய் காரணமாக, 2020 இல் 185,000 பேருக்கு மட்டுமே நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது. இது 2019 உடன் ஒப்பிடும்போது 45% குறைவு.
தற்போது நாட்டின் மக்கள்தொகை சுமார் 38 மில்லியனாக உள்ளது, மேலும் அதை ஆண்டுதோறும் 1% அதிகரிப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அடுத்த ஆண்டு மேலும் 411,000 வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதை இலக்காகக் கொண்டிருப்பதாக அரசாங்கம் கூறுகிறது.
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam