வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் நால்வர் படுகாயம்
வவுனியா (Vavuniya) - செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது, இன்று (16.08.2024) செட்டிகுளம் - மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அதிகாலை சம்பவம் நடந்த வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது இனம்தெரியாத நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், வாள்வெட்டு தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது, வீட்டில் இருந்த முதியவர்களான ஐயர் மற்றும் அவரது மனைவி அத்துடன் அந்த வீட்டில் இருந்த மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், காயமடைந்த மூவர் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தாக்குதல் மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் பறயநாலங்குளம் பொலிஸார் சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan