மோட்டார் சைக்கிள் மோதியதில் நால்வர் படுகாயம்
திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மயிலகுடாவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்த்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 6.30மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மஹதிவுல்வெவ பிரதேசத்திலிருந்து திருகோணமலை நோக்கி கணவன் மற்றும் மனைவி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது வீதியால் நடந்து சென்ற இருவரையும் மோதியதாகவும் தெரியவருகின்றது.
இவ்விபத்தில் மொரவெவ-மயிலகுடாவ பகுதியை இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதில் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. அத்துடன் மற்றைய நபரின் வலது கால் உடைந்து உள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் மற்றும் மனைவி ஆகியோர் காயங்களுக்குள்ளான நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த விபத்துகள் தொடர்புடைய கணவன், மனைவி இருவரையும் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri

ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
