யாழில் நான்கு போதைப்பொருள் வியாபாரிகள் கைது(Video)
யாழ்ப்பாண நகர் பகுதியில் ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர்கள் இன்றைய தினம்(15.10.2022) கைது செய்யப்பட்டுள்ளனர்.
புடவைக் கடைகளில் வேலை

கைது செய்யப்பட்ட நபர்கள் யாழ்.நகர் பகுதியில் உள்ள மூன்று புடவைக் கடைகளில் வேலை செய்துக்கொண்டு, 1000 போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மானிப்பாய்
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில் உள்ள கடை ஒன்றில் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சங்கானை சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கு அண்மையில் உள்ள கடை ஒன்றில் போதைப்பொருள் விற்பனை செய்வதாக மானிப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி-கஜிந்தன்
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 9 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri