தமிழர் பகுதியில் நான்கு வெடிகுண்டுகள் மீட்பு - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கிளிநொச்சி - அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெனேரிகுளம் பகுதியில், போரின் போது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நான்கு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நேற்றுமுன்தினம்(07.05.2026) ஜெயப்புரம் பொலிஸ் நிலையத்தில் ஹலோ டிரஸ்ட் (HALO Trust) கண்ணிவெடி அகற்றும் நிறுவன அதிகாரிகளால் இது குறித்த முதற்கட்டத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அக்கராயன்குளம் பகுதியில் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு: 36 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தீவிர ஆலோசனை..! தலைகீழாக மாறுமா விஜயின் நிலைமை
நீதிமன்ற நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து, நேற்று(2026.05.08) மதியம் 2:30 மணியளவில் ஹலோ டிரஸ்ட் அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி, அக்கராயன்குளம் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதுடன், நான்கு குண்டுகளை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட குண்டுகள் தற்போது பொலிஸாரின் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில், இன்று(2026.05.09) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தின் அனுமதி மற்றும் வழிகாட்டுதல்களின் பின்னர், குறித்த நான்கு வெடிகுண்டுகளையும் பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில மணி நேரங்களில் தமிழக அரசியலில் ஏற்படவுள்ள அதிரடி திருப்பம்! வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam