ஹெரோயினுடன் யுவதி உட்பட நால்வர் கைது
போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களின் போது யுவதி ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகேகொட நகரில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 05 கிராம் 160 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீகொட பகுதியைச் சேர்ந்நத 45 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை பொலிஸ் பிரிவில் 05 கிராம் 120 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 29 வயதுடைய பாணந்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 26 வயதுடைய யுவதி ஒருவர் 04 கிராம 260 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேனமுல்லைப் பகுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 02 கிராம் 710 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 57 வயதுடைய கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை,சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
