பல இலட்சம் டொலர்களுடன் சிக்கிய பெண் - பின்னணி குறித்து வெளியான பகீர் தகவல்
இலங்கையில் பல இலட்சம் டொலர்களுடன் சிக்கிய பெண் தொடர்பில் பொலிஸார் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் 60 கட்டு போலி 100 டொலர் தாள்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த பணத்தொகையின் இலங்கை ரூபா பெறுமதி 21 கோடி ரூபா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டிகாவத்தை பகுதியில் அமைந்துள்ள 53 வயதுடைய சந்தேக நபரான பெண்ணின் வீட்டில் வைத்தே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி அமெரிக்க டொலர்கள்
குறித்த டொலர் தொகை வெளிநாடொன்றில் அச்சிடப்பட்ட இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கடத்தல் சம்பவத்துடன் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவருக்கும் தொடர்பிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த போலி பண நோட்டுகளை ஒரு டொலர் 284 ரூபா என்ற வீதத்தில் மாற்றுவதற்காக தயாராக இருந்துள்ளதுடன், உள்நாட்டு வர்த்தகர்களை ஏமாற்றி இந்த டொலர் நோட்டுகளை அவர்கள் பரிமாற்றம் செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam
படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam