கிளிநொச்சியின் பல பகுதிகளில் நால்வர் கைது
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்பட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அவர்கள் பயன்படுத்திய மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் களவாடப்பட்ட ஒரு தொகை நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி, இராமநாதபுரம், புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், முள்ளியவளை, நெடுங்கேணி ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறுபட்ட கொள்ளை சம்பவங்களுடன் குறித்த சந்தேக நபர்கள் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
இவ்வாறு கொள்ளையிடப்பட்ட நகைகள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள வங்கிகள், அடைவு நிலையங்களில் சுமார் இருபத்தெட்டு இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகைகளில் அடைவு வைக்கப்ப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri
தீவு நாடொன்றை மொத்தமாக தாக்கவிருக்கும் புயல்: ஹொட்டல் ஒன்றில் சிக்கிய 200 பிரித்தானியர்கள் News Lankasri
2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam