ரோஹித ராஜபக்சவுக்கு சொந்தமான சொகுசு ஹோட்டல் எரிப்பு சம்பவம்: நால்வர் கைது
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்சவுக்கு சொந்தமான சொகுசு ஹோட்டலுக்கு கடந்த மே மாதம் 10ஆம் திகதி தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கொலன்னாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கராஜாவுக்கு அருகாமையில் கொலன்னா, எம்பிலிப்பிட்டிய கொங்கலகந்தவில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது.
“கிரீன் ஈகோ லொட்ஜ்' என்ற இந்த ஹோட்டலுக்கு கடந்த மே 10ஆம் திகதி அங்கிருந்த பொருட்களை திருடி போராட்டக்காரர்களால் தீவைக்கப்பட்டது.
சந்தேகநபர்கள் கைது
இச் சம்பவத்தோடு தொடர்புடைய சந்தேகநபர்கள் கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றும் 50 வயதுடைய கொலொன்ன பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்
மே 10 அன்று போராட்டக்காரர்களால் சொகுசு ஹோட்டல் தீக்கிரையாக்கப்பட்ட உடனேயே, அந்த ஹோட்டல் மகிந்த ராஜபக்சவின் மகன்களில் ஒருவருக்கு சொந்தமானது என்று தகவல்கள் வெளியாகின.
அது, இரண்டாவது மகனான யோஷித ராஜபக்சவுக்கு சொந்தமானது என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன எனினும் அவர் அதனை மறுத்திருந்தார்.
இந்தநிலையில் பொலிஸ் விசாரணைகளின்போது, அந்த ஹோட்டல் மகிந்தவின் மூன்றாவது மகன் ரோஹித ராஜபக்சவுக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
மூன்றாவது மகனான ரோஹித தனது தந்தை பிரதமராக இருந்த காலத்தில் எந்த உத்தியோகபூர்வ பதவியையும் வகிக்கவில்லை, இருப்பினும் அவர் அடிக்கடி அலரிமாளிகைக்கு பிரசன்னமாகியிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

பல்லவன்-பாண்டியன் கதறி அழுது நிலாவிடம் வைக்கும் வேண்டுகோள், அவரின் முடிவு என்ன?.. அய்யனார் துணை சீரியல் Cineulagam

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
