சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் தொடர்பில் நால்வர் கைது
பகிடிவதை காரணமாக தவறான முடிவெடுத்து உயிரிழந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் நான்கு மாணவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட இரண்டாம் ஆண்டு மாணவன் ஒருவர், கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி தவறான முடிவெடுத்து உயிரிழந்தார்.
பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்களின் பகிடிவதை காரணமாகவே அவர் தவறான முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவியின் மரணத்தில் திடீர் திருப்பம்! சிக்கப்போகும் தனியார் கல்வி நிலைய நிறுவனர்
விசாரணைகள்
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவு பிறப்பித்திருந்தார்.
விசாரணைகளின் அடிப்படையில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் ஞாயிற்றுக்கிழமை(04) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
