யாழ். கோப்பாய் பகுதியில் போதைப்பொருட்களுடன் நால்வர் கைது
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவில் கசிப்பு போதைப்பொருட்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தலமையில் இயங்கும் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொலிஸ் புலனாய்வு பிரிவினர்
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருநெல்வேலி சந்தையில் செருப்பு தைப்பவர் கசிப்பு வியாபாரத்தில் மறைமுகமாக ஈடுபட்டிருக்கும் பொழுது யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் அவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் அவரை விசாரித்தபோது, அவர் இன்னொரு இடத்தில் தொகையாக கசிப்பினை வாங்கி வந்து தினமும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் உதவியுடன் விற்பனை செய்யும் இடத்தை சுற்றிவளைத்த பொழுது கோப்பாய் மத்தி சூசியப்பர் கோவிலடியில் பெண்ணொருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 19 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைக்காக அவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 1 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri