கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர் கைது
அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் வேறு பகுதியில் மணல் ஏற்றிய
குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளும் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய நான்கு சாரதிகளுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
குறித்த கைது நடவடிக்கையானது பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், தடயப் பொருட்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam