யாழில் ஆரம்பமான திலித் தலைமையிலான பிரசாரக் கூட்டம்
புதிய இணைப்பு
சர்வசன அதிகார கூட்டணியின் முதலாவது அங்குரார்ப்பண தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று மாலை ஆரம்பமானது.
யாழ்ப்பாணம் றக்கா வீதியில் உள்ள இளங்கதிர் சனசமூக நிலைய மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, கெவிந்து குமாரதுங்க, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத ஜகம்பத் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டனர்.
சர்வஜன மக்கள் கட்சியின் தலைவரான தொழிலதிபர் திலித் ஜயவீர நட்சத்திர சின்னத்தில் இம்முறை சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
சர்வஜன பலயவின் (Sarvajana Balaya) ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர (Dilith Jayaweera) யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) விஜயம் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
யாழில் இன்றையதினம் (17) நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு சென்று அங்கு வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
இதன்போது, சர்வஜன பலயவின் கட்சித் தலைவர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, கெவிந்து குமாரதுங், அனுராத ஜகம்பத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும், யாழ்ப்பாணத்தில் சர்வமதத் தலைவர்களைக் சந்தித்துக் கலந்துரையாடினார்.
யாழ். ஆரியகுளம் நாகவிகாரை, யாழ்ப்பாணம் ஆயர் இல்லம், ஐந்து சந்தி ஜும்மா பள்ளிவாசல் மற்றும் நல்லை ஆதீனத்துக்கும் திலித் ஜயவீர சென்றுள்ளார்.
இதன்போது, சர்வஜன அதிகாரத்தின் கட்சித் தலைவர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, கெவிந்து குமாரதுங்க, அனுராத ஜகம்பத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், மௌபிம ஜனதா கட்சியின் (MJP) தலைவரான திலித் ஜயவீர இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நட்சத்திர சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
குறித்த கட்சியின் அங்குரார்ப்பண முதலாவது பொதுக்கூட்டம் இன்று திலித் ஜயவீர தலைமையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
