திருகோணமலை மாவட்டத்தில் 3 பொலிஸ் நிலையங்களில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது
திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பெயரில் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாகத் துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சீனக்குடா மற்றும் 5 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 27 வயது உடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களைத் திருகோணமலை நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இவர்களிடமிருந்து தலா இரண்டு கிரேம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 26 வயது இளைஞர் ஒருவர் இரண்டு கிரேம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரோதய நகர்ப் பகுதியில் 27 வயதுடைய இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ள நிலையில் அவரிடமிருந்து 5 கிராம் 280 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறித்த சந்தேக நபர்கள் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




