மட்டக்களப்பில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நால்வர் கைது
மட்டக்களப்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபை பெயரிடப்பட்ட வாகனத்தில் கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் சாரதி உட்பட நால்வர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து கேரளா கஞ்சா மற்றும் வாகனம்,மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டதாக மாவட்ட குற்ற விசாரணைப் பதிவு பொறுப்பதிகாரி பிகே பண்டார தெரிவித்தார்.
மட்டக்களப்பு விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைய மாவட்ட குற்ற விசாரணைப் பதிவு பொறுப்பதிகாரி பி. பண்டார தலைமையில் சப் இன்ஸ்பெக்டர், பத்திராஜா விக்கினேஷ்வரராஜா, எச்.எம்.றியாஸ், கமல்ராஜ், ரட்னநாயக்கா, மதுசங்க கொண்ட பொலிஸ் குழுவினரே இவர்களைக் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கிறனர்.







பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
