கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் ஏற்றிய நால்வர் கைது
கிளிநொச்சியில் (Kilinochchi) அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாற்று பகுதியில் நேற்று (19.05.2024) இடம்பெற்றுள்ளது.
தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட சுற்றிவளைப்பின் போது, அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகள்
அத்துடன், சந்தேக நபர்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri