தொண்டமனாறு- வல்லை துன்னாலை வீதிக்கு அடிக்கல் நாட்டால்..!
தொண்டமனாறு-வல்லை, துன்னாலை வீதி புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வானது அரசாங்கத்தின் திறைசேரி நிதியிலிருந்து வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தி அமைப்பாளருமான நிஷாந்தன் ஜனனி தலைமையில் தொண்டமனாறு சந்தியில் நேற்று(26.1.2026) பிற்பகல் 6:00 மணியளவில் இடம்பெற்றது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 3.9 km வீதி ரூபா 252 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது.
அடிக்கல் நாட்டால்
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வடமராட்சி அபிவிருத்தி குழு தலைவருமான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி பிரதம விருந்தினராக கலந்துகொண்டு முதல் கல்லை நாட்டிவைக்க வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் நடராசா திருலிங்கநாதன், வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் புலோளியூர் ரமணன், தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரும், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்ருமான சாம், வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்களான அன்பு, நிஷாந்தன் ஜனனி, சிகரம் அமைப்பின் வடக்கு மாகாண அமைப்பாளரும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினருமான உதயபாஸ்கர் ஆசிரியர் உட்பட பலரும் நாட்டி வைத்தனர்.

இந் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த வீதி கடந்த அரசாங்கத்தினால் புனரமைப்பதற்கு என அடிக்கல் நாட்டப்பட்டு இடைநடுவில் நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.