இத்தாலியில் புலம்பெயர்ந்தோர் பயணித்த படகு விபத்து
இத்தாலியின் லம்பேடுசா தீவில் புலம்பெயர் படகு விபத்துக்குள்ளானதில் 41 பயணிகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துனிசியாவிலிருந்து இத்தாலியை நோக்கி பயணித்த படகில் பயனித்த புலம்பெயர் பயணிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்
குறித்த விபத்தில் என உயிருடன் மீட்கப்பட்ட 4 பேர் வழங்கிய தகவலுக்கமையவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
1800 பேர் உயிரிழப்பு
மேலும் உயிருடன் தப்பியவர்களில் 3 ஆண்கள் மற்றும் 1 பெண் உள்ளடங்குகிறார்கள்.
மேலும், மூழ்கிய படகில் மூன்று குழந்தைகள் உட்பட 45 பேர் சென்றதாக மீட்புப் பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்
லம்பேடுசா பகுதியானது இத்தாலியின் தெற்கே உள்ள தீவாகும்.
மேலும், இரண்டாயிரமாம் ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்து, குறிப்பாக லிபியாவிலிருந்து வந்து, குடியேறுபவர்களுக்கான ஐரோப்பிய நுழைவுப் புள்ளியாக இந்த தீவு பகுதி மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வட ஆபிரிக்காவிலிருந்து இத்தாலியை சென்றடைவதற்கான முயற்சிகளில் இந்த வருடம் 1800 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
