யாழ்.கோட்டை பகுதியில் கலாசார சீரழிவுகள்: எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
யாழ்ப்பாணத்தின் புராதன சின்னமாக காணப்படும் யாழ்.கோட்டை பகுதியில் கலாசார சீரழிவுகளும், போதைப்பொருள் பாவனைகளும் இடம்பெறுவதாக பல்வேறு சமூக ஆர்வலர்களால் எமக்கு சுட்டிக் கட்டப்பட்டிருக்கின்றன என யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
கோட்டை பகுதியில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சமுதாய சீரழிவுகள்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,“பல்வேறு மட்டங்களில் இதன் பிரதிபலிப்பு உணரப்பட்ட நிலையில் பொலிஸாருடனும், இது தொடர்பாக வெவ்வேறு தரப்பினர் தொடர்புகளை மேற்கொண்டு இதனை கட்டுப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.
நீதிபதிகளும் இது தொடர்பாக யாழ்.மாநகரசபையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள்.
யாழ்.கோட்டைப் பகுதியினை சுற்றி இருக்கின்ற பற்றைக்காடுகளை அகற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
கோட்டை பகுதிக்கு நேரடி விஜயம்
இதனடிப்படையில் நான் இன்றைய தினம் நேரடியாக கோட்டை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு இங்கு நடைபெறுகின்ற விடயங்களை அவதானித்தேன்.
இதன்போது எங்கள் கண் முன்னே சமூதாய சீரழிவுகளும், போதைப்பொருள் பாவனையும் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
எனவே எதிர்காலத்தில் இந்த பகுதி திடீர் திடீரென பொலிஸ் உடனான எங்கள் சுற்று
வளைப்புக்கள், கண்காணிப்பு பணிகளுக்குள் உள்ளாக்கப்படும் என்பதை பொது மக்களின்
கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.”என கூறியுள்ளார்.


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

உளுந்து வடையில் நடுவில் ஓட்டை இருப்பதற்கு இதுதான் காரணமாம்! இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே Manithan

தனக்கு செம ஹிட் படம் கொடுத்த இயக்குனருடன் பேச்சு வார்த்தையில் நடிகர் அஜித்- யாருடன் தெரியுமா? Cineulagam

வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதை எளிதாக்கும் ஒரு விசா... சில பயனுள்ள தகவல்கள் News Lankasri

நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam

கனடாவுக்குள் நுழைய புலம்பெயர்வோருக்கு இலவச டிக்கெட்கள்?: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri

விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையா இது? இரண்டாவது திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க Cineulagam
