வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்த கோட்டாபய தமிழர்கள் தொடர்பில் பிறப்பித்த ஆணை
மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துகொண்டு ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்சவும் அவரது தரப்பினரும் தமிழர்கள் தொடர்பில் பல்வேறு ஆணைகளைப் பிறப்பித்தார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
2019இல் கோட்டாபய வரலாறு காணாத வெற்றியுடன் ஆட்சிக்கு வந்ததும் இலங்கைக்கு இனி விமோசனம் வந்துவிட்டது. இனி 20 வருட காலத்திற்கு அவரின் ஆட்சியை அசைக்க முடியாது. தமிழர்கள் இனிமேல் உரிமை, நீதி, நியாயமென்று மூச்சுக்காட்ட முடியாது. இதுவரை பெற்றுக் கொண்டது போதுமென்றோ, அல்லது இனி தருவதை வாங்கிக் கொண்டோ ஒதுங்கிவிட வேண்டியதுதான்.
அவ்விதம் விரும்பாதவர்கள் தாராளமாக நாட்டை விட்டு வெளியேறலாம் என்றெல்லாம் கோட்டாபய தரப்பு அரசியல்வாதிகள் மற்றும் ஆதரவாளர்களிடம் இருந்து ஆணைகள் பிறந்தன.
போராட்டங்களை நிறுத்த முடியாது
அந்த வேளையில் கோட்டாபய அல்ல. எந்தக் கொம்பன் வந்தாலும் எமது போராட்டம் நிற்காது அதனை நிறுத்தவும் முடியாது என்று காட்டவே அந்த ஊர்தி வழிப் பயணத்தை தொடர்ந்தோம்.
வழக்கம் போல வழி நெடுகிலுமுள்ள சிங்கள ஊர்களில் எத்தனையோ பயணத் தடைகளை முட்டுக்கட்டைகளை எதிர்கொண்டு சமாளித்து, தமிழ்ப் பிரிதேசங்களில் இருந்தெல்லாம் மேலும் ஆதரவாளர்களை இணைத்துக் கொண்டு சென்று பொலிகண்டியை அடைந்து வெற்றிகரமாக பணத்தைப் பூர்த்தி செய்தோம்.
இதில் எமது சக முஸ்லிம் அரசியல்வாதிகளும் எம்மோடு ஒத்துழைத்தனர்.
அவர்களில் இருந்து நஸீர் எம்.பி மாத்திரம் முரண்படுகிறாரென்றால் அதில் அரசாங்கத்தையும் தமக்கு வாக்களித்த மக்களையும் சமாளிக்கும் அரசியல் தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
