இலங்கை விவகாரத்தில் தீவிரமாக செயற்பட்ட தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் காலமானார்!
இலங்கை விவகாரத்தில் தீவிரமாக செயற்பட்ட தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் இப்ராஹிம் இஸ்மாயில் இப்ராஹிம் காலமானார்.
இந்நிலையில், அவரின் மறைவுக்கு உலக தமிழர் பேரவை இரங்கல் வெளியிட்டுள்ளது. இப்ராஹிம் இஸ்மாயில் இப்ராஹிம்மின் மறைவு மிகவும் வருத்தமளிப்பதாக உலகத் தமிழர் பேரவை கூறியுள்ளது.
தென்னாப்பிரிக்கா, லண்டன், சிங்கப்பூர் மற்றும் ஜேர்மனியில் இப்ராஹிமுடன் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கைகளையும் உலக தமிழர் பேரவை நினைவு கூர்ந்துள்ளது.
இப்ராஹிம் தொண்ணூறுகளில் இருந்து பல முறை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். ஏறக்குறைய அவரது வருகைகள் அனைத்தும் தமிழ் மக்களின் அவல நிலை குறித்த கவலையின் காரணமாகவே இருந்துள்ளன.
தென்னாபிரிக்காவில் இருந்து நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவின் ஒரு பகுதியாக, இப்ராஹிம் 1998 இல் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழர்கள் ஒரு சிறந்த நண்பரையும் தோழரையும் இழந்துள்ளனர் என உலக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 23 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
