தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி
உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகளால் தொகுக்கப்பட்ட தேடப்படும் நபர்களின் பட்டியலில் ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ் இருப்பதாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள உக்ரைனின் பாதுகாப்பு சேவை இதனை குறிப்பிட்டுள்ளது.
உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகள் மற்றும் அதன் எல்லைகளை மீறியமை தொடர்பான குற்றவியல் சட்டத்தின் ஒரு பிரிவின் கீழ் மெட்வெடேவ் தேடப்படுவதாக உக்ரைன் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.
தாமதமாக தகவலை பகிரங்கப்படுத்திய அதிகாரிகள்
மேலும், இந்த பட்டியலில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் பாராளுமன்றத்தின் கீழ் சபையின் தலைவர் வியாசெஸ்லாவ் வோலோடின் ஆகியோர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவரும், ஆக்கிரமிப்பு அரசின் முன்னாள் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டதை உக்ரைனின் பாதுகாப்பு சேவை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவின் முழு அளவிலான ஆக்கிரமிப்பின் பின்னர் இந்த அறிவிப்பு வெளியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், உக்ரேனிய அதிகாரிகள் ஏன் இந்த தகவலை விரைவில் வெளியிடவில்லை அல்லது அவர்கள் ஏன் அதை இப்போது பகிரங்கப்படுத்தினர் என்பது குறித்த தகவல்களை வெளியிடவில்லை