ஜெர்மனியில் ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனத்தின் முன்னாள் வடிவமைப்பாளர் குத்திக்கொலை
ரோல்ஸ் ரொய்ஸ் (Rolls-Royce) கார் நிறுவனத்தின் முன்னாள் தலைமை வடிவமைப்பாளர் இயன் கெமரூன் (Ian Camaroon) ஜெர்மனியில் (Germany) அவரது வீட்டில் வைத்து குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
உலகின் மிகவும் ஆடம்பரமான கார் நிறுவனமாக கருதப்படும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தற்போது பிஎம்டபுள்யூ கார் நிறுவனத்தின் தலைமையில் செயல்பட்டு வருகிறது.
குறித்த, ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனத்தின் கார்களின் வடிவமைப்பு குழுவின் தலைவராக இயன் கெமரூன் 1998ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வந்தார்.
மர்ம நபர்கள்
பல ஆண்டுகளாக ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனத்தில் கடமையாற்றி வந்த இவர், பின்னர் ஓய்வு பெற்றார்.

அதனையடுத்து, 74 வயதான கெமரூன், ஜெர்மனியின் ஹெர்சிங் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் தனது மனைவி கெலோஸ் உடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவரின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, அதனை தடுக்க முயன்ற இயன் கெமரூனை தாக்கிய கொள்ளையர்கள் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
விசாரணைகள்
அதனையடுத்து, அவரின் மனைவி கெலோஸையும் கொலை செய்ய முயன்ற போது, அவர் அருகே உள்ள வீட்டிற்குள் நுழைந்து உயிர் பிழைத்துள்ளார்.

அங்கிருந்து, பொலிஸாருக்கு அவர் தகவலை தெரிவித்துள்ளார். பொலிஸார் கெமரூனின் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த கொள்ளை கும்பல் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 13 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 போட்டியாளர் சின்னு செந்தமிழனுக்கு இப்படியொரு வாய்ப்பா?... வேறலெவல் சர்ப்ரைஸ் Cineulagam
அவுஸ்திரேலியா அணிக்காக சதமடித்த முதல் இந்தியர்! 184 பந்துகளில் 163 ஓட்டங்கள்..சிட்னியில் ருத்ர தாண்டவம் News Lankasri
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam