ஆட்சி காலத்தில் பெருந்தொகை பணத்தை செலவிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதிகள்!வெளியான தகவல்
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தமது ஆட்சி காலத்தில் தனிப்பட்ட ஊழியர்களின் பராமரிப்புக்காக பொது மக்களின் பெருந்தொகை பணத்தை செலவிட்டுள்ளனர் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இது தொடர்பான தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் ஊழியர்களின் பராமரிப்பு தொகை
இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2010-2014 ஆம் ஆண்டு தனது இரண்டாவது ஜனாதிபதிக்கான பதவிக்காலத்தில் 638,107,941.84 இலட்சம் ரூபாவினை தனது 2578 தனியார் ஊழியர்களின் பராமரிப்புக்காக செலவிட்டுள்ளதாகவுத் தெரிவந்துள்ளது.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் ஊழலுக்கு எதிராக பொது வேட்பாளராக களம் இறங்கி வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செலவிட்டதை விட அதிக பணத்தை தனது தனிப்பட்ட ஊழியர்களுக்காக செலவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 2015-2019 வரையான காலப்பகுதியில், மைத்திரிபால சிறிசேன தனது தனிப்பட்ட ஊழியர்களின் பராமரிப்புக்காக 850,326,968.14 பொதுப் பணத்தை செலவிட்டுள்ளதாகவும், சிறிசேனவின் தனிப்பட்ட ஊழியர்களாக 1378 பேர் பணிபுரிந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.