முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் – சரத் பொன்சேகா
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தின் ஒட்டுமொத்த பொறுப்பினையும் மைத்திரி ஏற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவு
தற்கொலைத் தாக்குதல் சம்பவத்திற்கு நட்டஈடு வழங்குவது பாதிக்கப்பட்டவர்களுக்கும் நாட்டுக்கும் போதுமானதல்ல எனவும் இதனை விடவும் கடுமையான தண்டனை மைத்திரிக்கு விதிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவு தொடர்பில் இன்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
