கடும் மன வருத்தத்தில் முன்னாள் ஜனாதிபதி - செய்திகளின் தொகுப்பு(Video)
அரசாங்கம் தமது யோசனைகளை கண்டு கொள்வதில்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்கத்திற்குள் அங்கம் வகிக்கும் கட்சி என்ற வகையில் அரசாங்கத்திற்குள் இந்த அனைத்துப் பிரச்சினைகள் பற்றியும் விரிவாக கலந்துரையாடியுள்ளோம்.
தனிப்பட்ட ரீதியில் பேசியிருக்கின்றோம், கட்சி என்ற ரீதியிலும், நாடாளுமன்றக் குழுக் கூட்டங்களிலும் இது பற்றிய கருத்துக்களை வாய்மொழி மூலமாகவும் எழுத்து மூலமாகவும் முன்வைத்துள்ளோம்.
பொருளாதாரப் பிரச்சினை, ஆசிரியர் சம்பளப் பிரச்சினை, உரப் பிரச்சினை, விவசாயத்துறை பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றி பேசியிருக்கின்றோம்.
இந்த அனைத்து விடயங்கள் பற்றிய யோசனைகள், பரிந்துரைகள் நாம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம். எனினும் துரதிஸ்டவசமாக நாம் சொல்லும் எதனையும் அரசாங்கம் கண்டுகொள்வதில்லை.
அதுவே தற்போதைய பிரச்சினைகளுக்கான காரணம் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 14 மணி நேரம் முன்
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam