கீரிமலை நகுலேஸ்வரம் திருக்கோயில் பிரதம குருவின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி இரங்கல்
கீரிமலை நகுலேஸ்வரம் திருக்கோயில் பிரதம குருவின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வரம் திருக்கோயில் பிரதம குருவும், ஆதீன கர்த்தாவும்,இலங்கையின் மூத்த சிவாச்சார்ய பெருந்தகையுமாக விளங்கிய மகாராஜ ஸ்ரீ சிவஸ்ரீ கு.நகுலேஸ்வரக் குருக்கள் அவர்களது இழப்புச் செய்தி கவலையளிக்கிறது.
மிகுந்த அர்ப்பணிப்போடு செயலாற்றியவர்
இலங்கையின் வடக்கு எல்லையில் எழுந்தருளியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரம் திருக்கோயிலின் வளர்ச்சியில் அவர் ஆற்றிய பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
நாட்டின் யுத்த சூழலுக்கு பின்னரான ஆலயத்தின் வழிபாடுகளிலும், ஆலயத்தின் தொன்மத்தை பாதுகாப்பதிலும் சிவாச்சாரிய பெருந்தகை மிகுந்த அர்ப்பணிப்போடு செயலாற்றியிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
