முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இயற்கை எய்தினார்
முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக் ஆண்டகை இன்று இயற்கை எய்தினார்.
தனது 95ஆவது வயதில் அவர் இயற்கை எய்தியுள்ளார்.
வத்திக்கானின் அறிவிப்பு
வயோதிப நிலை மற்றும் சுகயீனம் காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே அவர் இயற்கை எய்தியுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
முன்னாள் பாப்பரசரின் நல்லடக்கம் தொடர்பான அறிவிப்புக்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Declaration of the Director of the Holy See Press Office, Matteo Bruni
— Holy See Press Office (@HolySeePress) December 31, 2022
“With sorrow I inform you that the Pope Emeritus, Benedict XVI, passed away today at 9:34 in the Mater Ecclesiae Monastery in the Vatican.
Further information will be provided as soon as possible.”
2 ஜனவரி 2023 திங்கட்கிழமை காலை நிலவரப்படி, திருத்தந்தையின் உடல் செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் வைக்கப் பட்டிருக்கும் என வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் திருத்தந்தையின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக செய்திகள் ஏற்கனவே பல நாட்களாக வெளிவந்த நிலையில், முன்னாள் திருத்தந்தை உடல்நிலை, வயது முதிர்வு காரணமாக மோசமடைந்தது என, வத்திக்கான் பத்திரிகைகளும் தெரிவித்திருந்தது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்னாள் திருத்தந்தை XVI பெனடிக்ட் உடல்நிலை மோசமடைந்தது குறித்த செய்தியை இந்த ஆண்டின் கடைசி பொது பார்வையாளர்களின் இறுதியில் டிசம்பர் 28 அன்று பகிரங்கமாகப் பகிர்ந்து கொண்டார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
