அனுரவுடன் முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இணைந்தமைக்கு கடும் கண்டனம்
தேசிய மக்கள் சக்தியில் (NPP) முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இணைந்தமைக்கு ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் குழு, தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோர் தேசிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர்.
இதனையடுத்து, ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று (14.06.2024) உரையாற்றிய முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, 150 வருடங்கள் பழமையான வரலாற்றைக் கொண்ட பொலிஸ் திணைக்களத்தை, அரசியலுக்குள் கொண்டு வந்து அவப்பெயர் ஏற்படுத்தக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
ஜேவிபியின் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அதே உத்தியோகத்தர்கள், அதே கட்சியில் இணைந்தமை கண்டு, தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைத் தடுக்காத குற்றப் புலனாய்வுப் பிரிவின், குறித்த பிரதான அதிகாரிகள் இருவரும், வவுணத்தீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் படுகொலைச் சம்பவம் தொடர்பில், சஹ்ரான் குழுவினரை கைது செய்யாமல், விடுதலைப் புலிகள் மீது குற்றத்தை சுமத்தி விசாரணைகளை முடித்துக்கொண்டதாக, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த ஊடக சந்திப்பில், கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எடிசன் குணதிலக்க, ஓய்வுபெற்ற பொலிஸ் அத்தியட்சகர் நோர்டன் டி சில்வா, ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்க, ஓய்வுபெற்ற அத்தியட்சகர் சேனக குமாரசிங்க, ஓய்வுபெற்ற பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த ஹேரத் மற்றும் பலரும் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
