சிகிச்சை பலனின்றி உயிரிழந்த முன்னாள் பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர்
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தவிசாளராக இருந்த வேலுப்பிள்ளை நவரத்தினராசா உயிரிழந்துள்ளார்.
கடந்த 29ஆம் திகதி (29.06.2024) முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த போது புளியம்பொக்கணைப் பகுதியில் வீதியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பற்ற சமிக்ஞையில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியது.
நகரபிதாவாக கடமையாற்றினார்
இந்நிலையில் அவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்து நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

எனினும். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4:00 மணியளவில் மரணமடைந்துள்ளார்.
இவர் பருத்தித்துறை நகரசபையில் இறுதியாக சில மாதங்கள் நகரபிதாவாக கடமையாற்றியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 19 மணி நேரம் முன்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam