தந்தை செல்வாவின் ஒருமித்த நிலைப்பாடு தமிழ் மக்களுக்கு முக்கியம்: நாகலிங்கம் வேதநாயகன் சுட்டிக்காட்டு
தற்போது தமிழ் மக்களுக்கு தந்தை செல்வாவின் ஒருமித்த நிலைப்பாடு மிகவும் முக்கியமான ஒன்று என யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
தந்தை செல்வாவின் 126 ஆவது ஜெயந்தி தினம் தொடர்பாக இன்று(27.03.2024) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க அதிபர்
தந்தை செல்வா அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழ் மக்களை ஒரு சரியான பாதையில் வழிநடத்திச் சென்றார். அவரது வழிகாட்டல் தற்போதும் தமிழ் மக்களுக்கு தேவைப்படுவதாகவும் முன்னாள் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தந்தை செல்வாவின் ஜெயந்தி தினம் தொடர்பாக அறங்காவலர் சபையின் தலைவர் பேரின்பநாயகம் அவர்களும் கருத்து வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |