முன்னாள் கடற்படைத் தளபதி தொடர்ந்தும் விளக்கமறியலில்...
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வுநிலை) நிஷாந்த உலுகேதென்ன மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொத்துஹெர பகுதியில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார் என்று கூறப்படும் சம்பவம் தொடர்பாக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.
விசாரணை
இந்தநிலையில், இன்று பொல்கஹவெல நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்த காலத்தில், பொத்துஹெர பகுதியில் நடந்த ஒரு கடத்தல் தொடர்பான விசாரணை தொடர்பாக, முன்னாள் கடற்படைத் தளபதி கடந்த (28) குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri