இரகசியமாக வாகனங்களை இறக்குமதி செய்த முன்னாள் எம்.பிக்களுக்கு அநுர எச்சரிக்கை
கடந்த காலங்களில் வாகன இறக்குமதி தடை செய்யப்பட்டிருந்தாலும், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரகசியமாக வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சட்டவிரோதமாக வாகனங்களை இறக்குமதி செய்து, அவற்றை பதிவு செய்யாமல் ஓட்டும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
"பொதுவாக, எங்கள் கிராமங்களில் மக்கள் பொலிஸாருக்கு பயந்து ஒளிந்து கொள்கிறார்கள்.
சட்டத்திற்கு அடிபணிய வேண்டும்
கடந்த சில நாட்களில் என்ன நடந்தது? நாங்கள் தேடுகிறோம், ஐஜிபி எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறார்.
யாராக இருந்தாலும் சட்டத்திற்கு அடிபணிய வேண்டும். சட்டத்திற்கும் பயப்பட வேண்டும்.
கடந்த காலத்தில், இலங்கைக்குள் வாகனங்களை இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டது. ஆனால் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களிடம் வாகனங்கள் உள்ளன.
வாகனங்கள் பதிவு செய்யப்படாமல் வீதியில் இயக்கப்படுகின்றன.
அதற்கு என்ன அர்த்தம்? அமைச்சர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எந்தச் சட்டங்களும் இல்லை என்பதா?
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam
