நினைவேந்தலை தடுப்பது நல்லிணக்கத்திற்கு அடிக்கும் சாவு மணியே: முன்னாள் எம்.பி சந்திரகுமார்
நினைவேந்தல் நிகழ்வை கூட தமிழ் மக்கள் மேற்கொள்ள முடியாத படி அரசும் அதன் கட்டமைப்பான பொலிஸாரும் மேற்கொள்ளும் தடை நடவடிக்கைகள் இந்த நாட்டின் நல்லிணக்கத்தின் மீது அடிக்கும் சாவு மணி என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் (M. Chandrakumar) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் மீது அடக்கு முறை
மேலும் அவர் குறிப்பிட்டதாவது,
“2009 இல் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டார்கள், கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து தங்களை ஆற்றுப்படுத்திக்கொள்வதற்கு கூட முடியாத அளவுக்கு இலங்கையில் தமிழ் மக்கள் மீது அடக்கு முறை பிரயோகிக்கப்படுகிறது.
தெற்கிற்கு ஒரு நீதி வடக்கிற்கு ஒரு நீதி என்ற நிலைப்பாட்டில் தமிழ் மக்கள் மீதான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறன.
இந்த சிறிய தீவில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய அரசும் அதன் கட்டமைப்பு பாரபட்சமாக நடந்து கொள்வது என்பது ஒரு காலமும் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது.
இனங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படாத போது இலங்கையில் ஒரு போதும் நிலையான சமாதானம் ஏற்படாது.
இன நல்லிணக்கம்
யுத்தம் முடிவுக்கு வந்து 15 வருடங்கள் கழிந்த போதும் இனங்களுடைக்கிடையே இடைவெளியும் கூடிக்கொண்டே போகிறதே தவிர குறைவதாக தெரியவில்லை.
பாதிக்கப்பட்ட ஒரு இனத்தின் உணர்வுகளை புரிந்துகொண்டு, நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டுமே தவிர வெற்றிப்பெற்ற மனநிலையில் இருந்து கொண்டு தமிழ் இனத்தை கையாள்வது கவலைக்கும் கண்டனத்திற்கும் உரியது.
எனவே இந்த அரசு உடனடியாக தமிழ் மக்கள் மீதான இவ்வாறான அடக்கு முறைகளை கைவிட வேண்டும்.
உறவுகளை நினைவுபடுத்தும் உரிமைகளில் அரசோ அதன் கட்டமைப்போ தலையிடக் கூடாது.
தமிழ் மக்களை தொடர்ந்தும் காயப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவதனை நிறுத்தி நல்லிணக்கத்தை வளர்தெடுக்க முயற்சிக்க வேண்டும்”என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 2 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
