தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க
முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி.திஸாநாயக்க தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க சென்றிருந்த கூட்டத்தில் கலந்து கொண்டதன் காரணமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அக்கரபத்தனை பிரதேசசபை தவிசாளர் அருள் செல்வத்திற்கு கொரோனா தொற்றியுள்ளதன் காரணமாக அவரது இணைப்பாளர்களான அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க, ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க கலந்து கொண்ட கூட்டத்தில் தானும் கலந்து கொண்டதால், எஸ்.பி.திஸாநாயக்க தன்னை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொண்டுள்ளார்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri