ஒரு சாணக்கிய தொழிற்சங்கவாதியை இழந்துவிட்டது! ஜீவன் தொண்டமான் இரங்கல்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குடும்பம் ஒரு சாணக்கிய தொழிற்சங்கவாதியை இழந்துவிட்டது. இந்த இழப்பு காங்கிரஸிற்கு மட்டுமல்ல. மலையக மக்களுக்கும் ஒரு பேரிழப்பாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இரங்கல் செய்தியில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
1994ம் ஆண்டு காலப்பகுதியில் இருளில் இருந்த மலையகத்திற்கு தன்னுடைய அமைச்சின் ஊடாக மின்சாரத்தை பெற்று ஒளி தந்தவர் அமரர். முத்துசிவலிங்கம். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூத்த தலைவரென சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயா போற்றப்பட்டதன் பின் தற்போது மூத்த தலைவர் என்ற வரிசையில் முத்து சிவலிங்கம் ஐயாவும் இணைவார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 83 வருட அரசியல் மற்றும் தொழிற்சங்க வரலாற்றில் பல தசாப்த காலமாக தொழிற்சங்கம் மற்றும் அரசியல் வழிகாட்டியாக இருந்து இந்த மாபெரும் அமைப்பின் தலைவராகவும், போசகராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், மலையக மக்களின் பிரதி அமைச்சராகவும், பதவி வகித்து எம்மை வழிநடத்திய இந்த மூத்த தலைவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும்.
காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் ஐயா சௌமிய மூர்த்தி தொண்டமானின் மறைவுக்கு பின் எனது தந்தை அமரர். ஆறுமுகன் தொண்டமானின் அரசியல் மற்றும் தொழிற்சங்க வழிகாட்டியாக இருந்த இவர்.
இவர்களின் மறைவுக்கு பின் என்னையும் வழிநடத்தினார்
என்பதை மறந்துவிட முடியாது.
அன்னாரின் பிரிவால் துயர்கொண்டுள்ள குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துக்கொள்வதோடு, இவரின் குடும்பத்தாருடன் துக்கத்தை பகிர்ந்துக்
கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri