முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு விளக்கமறியல்
புதிய இணைப்பு
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை எதிர்வரும் நவம்பர் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக கண்டியில் கைது செய்யப்பட்ட ரத்வத்த இன்று மாலை மிரிஹான பொலிஸுக்கு அழைத்து வரப்பட்டு பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதனையடுத்தே விசாரணைக்காக அவரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
செய்தி - சிவா மயூரி
இரண்டாம் இணைப்பு
கண்டியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று (31) மாலை மிரிஹான பொலிஸ் நிலையத்தில் இருந்து நுகேகொடை பதில் நீதவான் முன்னிலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
மிரிஹான பிரதேசத்தில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கண்டியில் கைது செய்யப்பட்ட நிலையிலேயே தற்போது இந்த நடவடிக்கை முன்னெடுக்ககப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டியில் வைத்து இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுகேகொட, மிரிஹான பிரதேசத்தில் உள்ள அவரது மனைவி வீட்டில் இலக்கத் தகடு இல்லாத கார் ஒன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
பல்வேறு மோசடிகள்
குறித்த கார் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மகிந்த ஆட்சியின் போது பல்வேறு மோசடிகள் தொடர்பில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.