பிரதமர் அலுவலகத்தின் பணிக்குழாம் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ள முன்னாள் அமைச்சர்
பிரதமர் அலுவலகத்தின் பணிக்குழாம் தலைமை அதிகாரியாக முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க விரைவில் நியமிக்கப்படக் கூடும் என்று தெரியவந்துள்ளது.
அலரி மாளிகை தகவல் வட்டாரங்கள் இந்தச் செய்தியை உறுதிசெய்துள்ளன.
வேறு பதவியிலும் அவரை நியமிக்கக்கூடும்
பிரதமர் அலுவலகத்தின் பணிக்குழாம் தலைமை அதிகாரி அல்லது அதற்கு சமமான பதவியொன்றில் அவர் நியமிக்கப்படக்கூடும் என்று குறித்த தகவல் வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக பிரதமர் அலுவலகத்தின் பணிக்குழாம் தலைமை அதிகாரியாகவும் சாகல ரத்நாயக்க பதவி வகித்திருந்தார்.
அத்துடன் இம்முறை பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டபின் கூட்டப்பட்ட உணவுப் பாதுகாப்பு தொடர்பான முதலாவது உத்தியோகபூர்வ கலந்துரையாடலின் போதும் பிரதமருக்கு அடுத்த ஆசனத்தில் சாகல ரத்நாயக்கவே அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri

வட்டியில்லா கடன்களை வழங்கும் PM Svanidhi Yojana திட்டம்.., வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி News Lankasri
